Sunday, November 21, 2010

nagaichuvai

                                  செத்தும்  கெடுத்தான் கணக்கன்                                                                                                                                                                                        ஒரு ஊரில் கணக்கன் என்பவன் வாழ்ந்து    வந்தான். அவனுக்கு தினமும் யாராவது ஒருவருக்காவது தீமை செய்யவேண்டும் இல்லையென்றால் அவனுக்கு சாப்பிட்ட சாப்பாடு ஜீரணம் ஆகாது. தூக்கமும் வராது.இவனால் அனுதினமும் கொடுமையை அனுபவித்த மக்கள் ஒரு முடிவிற்கு வந்து இவனுடன் அந்த ஊரில் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்று முடிவு செய்து அவனை கிட்டத்தட்ட ஊரைவிட்டே ஒதுக்கி வைத்து விட்டனர்.இவ்வாறு இருக்கையில் அவன் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையில் கிடந்தான்.ஊரில் உள்ள யாரும் அவனை  திரும்பியே பார்க்கவில்லை.இந்த நிலையில் கணக்கன் அவனது உறவினர் ஒருவன் மூலமாக ஊர்மக்கள் அனைவரையும் தான் பர்க்கவிரும்புவதகவும் ஊர்மக்கள் அனைவரிடமும் தான் இதுவரை அவர்களுக்கு கொடுத்த துன்பங்களுக்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும் சொல்லியனுப்பினான். இதைக்கேட்ட ஊர்மக்களும் போனால் போகிறது கணக்கன் சாகக்கிடக்கிறான் இந்த நேரத்தில் நாம் பழையதை நினைத்து அவனை பார்க்கப்போகாமல் இருக்கக்கூடாது என்று ஊர்மக்கள் அனைவரும் ஒன்று கூடி கணக்கனைப் பார்க்கவந்தனர்.அப்போது கணக்கன் அவர்களிடம் நான் உங்களுக்கு என்னுடைய வாழ்நாள் முழுவதும்  மிகவும் தொல்லை கொடுத்து இருக்கிறேன் அப்படிஇருந்தும் நான் உங்களையெல்லாம் பார்க்க வேண்டும் என்று சொல்லியானுப்பியதும் ஊர்மக்கள் அனைவரும் என்னைப்பார்க்க வந்திருக்கிறீர்களே இதற்கு நான் என்ன கைம்மாறு செய்வது என்று ஓ என்று அழுதான்.பின்னர் ஊர்மக்களிடம் நான் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாளில் இறந்துவிடுவேன் நான் இறந்த பின் என்னுடைய உடம்பை சுடுகாட்டிற்கு எடுத்துசெல்லும் போது ஊர்மக்கள் அனைவரும் என்னுடைய உடம்பை ஒருகயற்றில் கட்டி சுடுகாடுவரை தர தரவென இழுத்துக்கொண்டுதான் செல்லவேண்டும்.அத்துடன் ஊரில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் இதில் கலந்துகொண்டு என் உடம்பை இழுத்துசெல்லும்போது என் உடம்பை செருப்பினாலும் விளக்குமாராலும் அடிக்க வேண்டும் இதுவே என் கடைசி ஆசை .ஊர்மக்கள் அனைவரும் இதை நிறைவேற்றினால்தான் நான் இதுவரை உங்களுக்கு செய்தபாவத்திட்கு பரிகாரம் என்னுடைய ஆத்மா சாந்தியடையும் என்று கூறினான்.இதைக்கேட்ட ஊர்போதுமக்களுக்கு இந்தப்பாவத்தை எப்படி செய்வது என்றபோதும் கணக்கன் திரும்ப திரும்ப வலியுறுத்தியதால் அதற்கு சம்மதித்தனர்.சொன்னது போலவே இரண்டுநாளில் கணக்கன் இறந்துவிட்டான்.ஊர்போதுமக்களும் கணக்கனின் விருப்பத்தை நிறைவேற்றவேண்டுமே என்பதற்காக அவனது உடலை ஒரு கயிற்றில்கட்டி ஊர்போது மக்கள் அனைவரும் சேர்ந்து அவனது உடம்பை செருப்பாலும் விளக்குமாராலும் அடித்துக்கொண்டு சுடுகட்டிட்கு இழுத்துசென்றனர்.ஊர்போதுமக்கள் அனைவரும் சுடுகாட்டை அடையவும் இரண்டு லாரி நிறைய போலிஸ் வந்து இறங்கவும் சரியாக இருந்தது.ஊர்மக்கள் அனைவரையும் சுற்றிவளைத்து லாரியில் ஏற்றினார்கள்.அப்போதுதான் அவர்களுக்கு தெரிந்தது கணக்கன் ஊர்மக்களிடம் இந்தமாதிரி செய்யசொல்லிவிட்டு ஊர்மக்கள் அனைவரும் தன்னை துன்புறுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளனர்.எனவே என் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் எனது உயிருக்கு எதாவது ஆயிற்று என்றல் அதற்கு ஊர்மக்களே பொறுப்பு என்றும் புகார் அனுப்பிவிட்டான்.அப்போதுதான் பொதுமக்கள் நினைத்தனர்.செத்தும் கெடுத்தான் கணக்கன் என்று

Friday, November 19, 2010

                                      அயர்லாந்தில்     தீபாவளி   கொண்டாட்டம்                             அயர்லாந்து நாட்டில்    முதன் முறையாக  இந்த வருடம்தீபாவளி       கொண்டாடப்பட்டது.அயர்லாந்து நாட்டின் தலைநகரான  டப்ளினில்  ஒரு       பெரிய ஹாலில் தீபாவளி  பண்டிகை  நவம்பர் 6   ஆம் தேதி   மதியம்  12  மணிக்கு    துவங்கி  மாலை 7 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.முதலில் குத்துவிளக்கு ஏற்றி பூஜையுடன்  ஆரம்பமானது.சுமார் இரண்டாயிரம் பேர்வரை கலந்துகொண்டார்கள்.இதில் சுமார் ஐம்பது பேர்வரை   ஐரிஸ் காரர்களும் அடங்குவர்.பரத  நாட்டியம் ,குச்சிப்புடி ,பாங்க்ரா, தாண்டியா ,கேரளா ஓணம்  நாட்டியம் போன்ற  பலவகையான நாட்டியங்களும் பாடல் நிகழ்சிகளும் நடைபெற்றது.விழாவின் இறுதியாக வண்ண வண்ண பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன.மேலும் நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் பலவிதமான இந்தியன் உணவு அரங்கங்களும் ,மெஹந்தி இடுவது ,சிறிய நகைக்கடை,இந்திய ஆடைகளும்  விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.நம்மவர்களை விட வெளினட்டுக்கரர்கள் அவற்றை ஆவலுடன் பார்த்து ரசித்தனர்.இந்த விழாவில் வடஇந்திய மக்களே அதிகம் பங்கேற்று இருந்தனர்.தமிழ் ,மலையாளி,தெலுங்கர்,கன்னடியர்,வடஇந்தியர்,வெளிநாட்டவர் போன்ற அனைவரும் கலந்துகொண்ட இந்தவிழா இந்தியாவின் ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.